background img

புதிய வரவு

டீசல் விலை உயராது: ஜெய்பால் ரெட்டி


டீசல் விலையை உய‌ர்‌‌த்து‌ம் எ‌ண்ண‌ம் அர‌சிட‌‌ம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்ச‌ர் ஜெய்பால் ரெட்டி கூ‌றியு‌ள்ளா‌ர்.

பு‌திய அமை‌ச்சராக பொறு‌ப்பே‌ற்ற ‌‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 7 நஷ்டம் ஏற்படுகிறது எ‌ன்று‌ம் இருப்பினும் விலையை உயர்த்தும் எ‌ண்ண‌ம் இல்லை என்று‌ம் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டபிறகு இதுவரை 7 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என‌்று கூ‌றிய ஜெ‌ய்பா‌‌ல்ரெ‌ட்டி, இருப்பினும் இப்போதைய விலை உயர்வை திரும்பப் பெறமாட்டாது என்று திட்டவட்டமாக கூறினார்.

மானிய விலையில் எரிபொருள் விற்பனையால் நடப்பு நிதி ஆண்டில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் எ‌ன்று‌ம் இதனால் சுங்க வரி, உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும் எ‌ன்று‌ம் ஜெ‌‌ய்பா‌ல் ரெ‌ட்டி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts