காதல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சந்தியா, கூடல்நகர், டிஸ்யூம், மகேஷ் சரண்யா மற்றும் பலர் என பல படங்களில் நடித்துள் ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வரு கிறார். த்ரீகிங்ஸ் என்ற மலையாள படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கேரளாவில் காலக்குடி அருகே உள்ள திரப்பள்ளி நீர் வீழ்ச்சி அருகே நடந்தது. கதாநாயகன் இந்திரஜித்தும் சந்தியாவும் பைக்கில் செல்வது போன்று காட்சி எடுத்தனர். மழையால் ரோடு சகதியாக இருந்தது. பைக் அதில் சிக்கியது.
சந்தியா நிலைதடுமாறி கீழே விழுந்தார். கையில் பலத்த அடிபட்டது காலில் சைலஞ்சர் சுட்டு தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி சந்தியா கூறும் போது அதிர்ஷ்ட வசமாக தப்பினேன் காயத் துக்கு ஆஸ்பத்திரியில் மருந்து போடப்பட்டு உள்ளது. ஓட்ட லில் ஓய்வு எடுத்து வருகி றேன். காயம் குணமான பிறகு தான் மீண்டும் நடிப்பேன் என்றார்.
0 comments :
Post a Comment