நித்யானந்தா சாமியா ருடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்று வெளியான வீடியோ படம் கடந்த வருடம் பரபரப்பை ஏற்படுத் தியது. அதன் பிறகு ரஞ்சிதா தலைமறைவானார்.
போலீஸ் கைது செய்வார்கள் என பயந்து அமெரிக்காவில் உள்ள சகோதரி வீட்டில் தங்கினார். கடந்த வாரம் திடீரென பெங்ளூர் வந்து கோர்ட்டில் ஆஜரானார்.
ஆபாச வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை என்று மறுத்தார் சினிமாவுக்கு முழுக்கு போடவில்லை என்றும் நல்ல கதைகள் அமைந்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றும் அறிவித்தார். ஆபாச வீடியோ பிரச் சினைகளுக்கு பிறகு முதல் தடவையாக மலையாள படமொன்றில் நடிக்கிறார்.
அப்படத்தின் பெயர் புதுமுகங்கள் தான் அலெக்ஸ் டைரக்டு செய்கிறார். நித்யானந்தா பிரச் சினைக்கு முன்பு தமிழில் ராவணன் படத்தில் பிரபு ஜோடியாக சில காட்சிகளில் வந்தார் ஆபாச வீடியோ சர்ச்சையால் அக்காட்சியை நீக்க மணிரத்னம் முயன்றார். கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்டு படத்தில் ரஞ்சிதா சீன்களை இடம் பெறச் செய்தார்.
ஓடும் மேகங்களே என்ற தமிழ் படத்திலும் நடித்து முடித் தார். அந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. செழியன் இயக்கியுள்ளார். மேலும் பல தமிழ் படங் களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் ரஞ்சிதாவை அணுகியுள்ளனர்.
0 comments :
Post a Comment