background img

புதிய வரவு

அ.தி.மு.க., கூட்டணியில் நீடிப்போம் : தா.பாண்டியன் பேட்டி


கோவை : ""அ.தி.மு.க., கூட்டணியிலேயே தொடர முடிவு செய்துள்ளோம்; தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேசுவோம்,'' என, இந்திய கம்யூ., மாநில செயலர் பாண்டியன் தெரிவித்தார். கோவையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில், அனைத்து துறைகளையும் பாதிக்கும் விதத்தில் பாரபட்சமில்லாத ஊழல் நடந்துள்ளது. இதைத் தடுக்க முயற்சி எடுக்கவில்லை; இது, மத்திய அரசின் நிர்வாக சீர்குலைவை காட்டுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில், பார்லிமென்ட் கூட்டுக்குழு தவிர, மாற்று ஆலோசனைகளை ஏற்க நாங்கள் தயாரில்லை.
காலாவதியான மருந்து விற்பனை, தமிழகத்தில் தொடர்கிறது. தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் கோவையில் அச்சடித்து, வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு, ஒரு காங்.,எம்.பி.,யும் உடந்தை. மீனவர் ஜெயக்குமார் கொலை சம்பவத்துக்கு, அனைத்துக் கட்சி சார்பில், போராட்டம் நடத்தப்படும்.
அ.தி.மு.க., எங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையோ, விதிமுறைகளையோ வகுக்கவில்லை; இதனால், அக்கூட்டணியிலேயே தொடர முடிவு செய்துள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பேசுவோம். தேர்தல் வாக்குறுதிகள், கூட்டணி சார்பிலும், எங்கள் கட்சி சார்பில் தனித்து வெளியிடப்படும். பிப்., 20ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு, தா.பாண்டியன் கூறினார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts