சிட்னி: சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி பல சாதனைகளுடன் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்களில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் 24 வருடங்களின் பின்பு ஆஷஸ் தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது. இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்டில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து தோற்கும் நிலையில் இருந்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 488 ரன் எடுத்திருந்தது. பிரியர் 54, பிரெஸ்னன் (0) நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். அபாரமாக விளையாடிய பிரியர் சதம் அடித்தார். பிரியர் 118 ரன் (130 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), பிரெஸ்னன் 35, டிரெம்லெட் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 644 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்வான் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸி. பந்துவீச்சில் ஜான்சன் 4, ஹில்பென்ஹாஸ் 3, சிடில், வாட்சன், பியர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 364 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 4ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்துள்ளது. வாட்சன் 38, கவாஜா 21, கேப்டன் கிளார்க் 41, ஹாடின் 30 ரன் எடுத்தனர். ஹியூஸ் 13, ஹஸி 12 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஜான்சன் டக் அவுட் ஆனார். ஸ்மித் 24, சிடில் 17 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 24 ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலியா மண்ணில், ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து. இதற்கு முன் கடந்த 1987ம் ஆண்டு மைக் கேட்டிங் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை கைப்பற்றி இருந்தது.
0 comments :
Post a Comment