ஆப்பிள் - 2
பால் - 2 கப்
முந்திரி - 10
பிஸ்தா - 10
பாதாம் - 10
சர்க்கரை - 2 கப்
செய்யும் முறை
அடுப்பில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சுங்கள்.
பால் சுண்டுவதற்குள் ஆப்பிளை நறுக்கி மிக்சியில் போட்டு மசித்துக் கொள்ளலாம். அல்லது தேங்காய் சீவலில் வைத்து சீவிக் கொள்ளலாம்.
பால் சுண்டி 1 கப் ஆனதும் அதில் சர்க்கரையைப் போட்டு கலக்கி விடவும்.
சர்க்கரை நன்கு கரைந்ததும் ஆப்பிளைப் போட்டு கலக்கவும்.
WD
ஆப்பிள் ரப்டி தயார். அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து பரிமாறி அலங்கரிக்கவும்.
0 comments :
Post a Comment