''இந்தாண்டு 2 லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்இணைப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்டகேள்விகளுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதில் அளிக்கையில்,இந்தாண்டு 2 லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்இணைப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நிச்சயம் இந்த ஆண்டுவழங்கப்படும்.
அதற்கு நிபந்தனைகள் இருப்பதாகவும் அதை தளர்த்த வேண்டும் என்றும்உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. அது பற்றிபரிசீலிக்கப்படும.ஒரு சில இடங்களில் கூடுதல் மின்சாரம் பயன்படுத்துவதன் காரணமாகடிரான்ஸ் பார்மர்கள் பழுதடைவதாகவும் கூடுதல் துணை மின் நிலையங்கள்தேவை என்றும் கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை நிறைவேற்ற உரியநவடிக்கை எடுக்கப்படும்.
காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வழங்க தேவையானஅளவு துணை மின்சார நிலையங்கள் இல்லாததால் மின்சாரத்தைவிநியோகம் செய்ய முடியாத நிலை இருப்பதாக கூறப்பட்டது. எனவேதனியார்கள் சார்பிலேயே துணை மின் நிலையம் அமைக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
மின் தட்டுப்பாடு இருப்பதால் காற்றாலை மூலம் உற்பத்தியாகும்மின்சாரத்தை தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதி இல்லை. 2012ஆம்ஆண்டுக்குப்பிறகு தமிழ்நாட்டில் மின் உற்பத்தி உபரியாக இருக்கும் அதன்பிறகு காற்றாலை மின்சாரத்தை தனியாருக்கு விற்பது குறித்துஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்
0 comments :
Post a Comment