கொடியேற்றும் பிரச்சனை: ஒமர் அப்துல்லா வேண்டுகோளை நிராகரித்தது பா.ஜ
காஷ்மீரின் லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று ஏற்கனவே அறிவித்தபடி தேசியக் கொடி ஏற்றப்படும் என்று பா.ஜனதா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பா.ஜனதா இளைஞரணி தலைவர் தாகூர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய ராஷ்ட்ரீய ஏக்தா யாத்திரை, வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் முடிவடைகிறது. அப்போது அங்கு தேசிய மூவர்ண கொடியை ஏற்றப்போவதாக தாகூர் அறிவித்துள்ளார்.
ஆனால் லால் சவுக்கில் தேசியக் கொடியை ஏற்றுவது அப்பகுதியில் மதக்கலவரம் ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதால்,. அத்திட்டத்தை கைவிடுமாறு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, பா.ஜனதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசி இருந்தார்.
இந்நிலையில் ஒமர் அப்துல்லாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ள பா..ஜனதா, திட்டமிட்டபடி லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றப்பட்டே தீரும் என்றும், ஒமர் அப்துல்லாவும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளது.
சண்டிகரில் இதனை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தாகூர், பிரிவினைவாதிகள் எங்களுக்கு உத்தரவிடுவதை அனுமதிக்க முடியாது என்று மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment