undefined
undefined
ஆளுநர் மாளிகையை நோக்கி கர்நாடக அமைச்சர்கள் பேரணி
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் உள்துறை அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதியளித்து ஆளுநர் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவின் நகலை அளிக்கக் கோரி ஆளுநர் மாளிகை நோக்கி அந்த மாநில அமைச்சர்கள் இன்று பேரணி நடத்தினர்.
தம்மீது வழக்குத் தொடர அனுமதியளித்த ஆளுநரின் செயலைக் கண்டித்திருந்த முதல்வர் எடியூரப்பா, "அரசியல் சட்டப்படி, ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என் மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதியளித்த உத்தரவை எனக்குத் தராமல் இருப்பது துரதிருஷ்டவசமானது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவின் நகலை அளிக்கக் கோரி சட்டத் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பல் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை நடந்து வந்த அவர்கள்: ஆளுனருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
0 comments :
Post a Comment