மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே வாய்க்காலில் மினி வேன் கவிழ்ந்த தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பலியான சம்பவம் புத்தாண்டு தினமான நேற்று அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.சேலம் பழைய சூரமங்கலம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (30). இவருக்கு சொந்தமான மகேந்திரா பிக்அப் மினி வேனில் சேலத்திலிருந்து திருச்சி நோக்கி வாடகைக்கு மொசைக்கல் ஏற்றிக்கொண்டு ஓட்டி வந்தார்.செல்லும் வழியில் சமயபுரம் கோவிலுக்கு செல்வதற்காக தனது குடும்த்தினரையும் வேனில் அழைத்து வந்துள்ளார். வேனில், அவரது அப்பா அங்குராஜ்(58), அம்மா பேபிகலா(45), மனைவி கவிதா(25), மகன் ஆகாஷ்(8), மகள் அட்சயா(3) ஆகியோர் இருந்துள்ளனர்.திருச்சி அருகே வாத்தலை புதிய பாலம் அருகிலுள்ள அய்யன் வாய்க்காலில் நேற்று இரவு ஏழு மணியளவில் வேன் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
வேன் முன்பக்க கேபினில் அமர்ந்திருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். இதில், அங்குராஜ், பேபி கலா இருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை அட்சயா, சிறுகாம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.வேனை ஓட்டி வந்த மணிவண்ணன், அவரது மனைவி கவிதா, குழந்தை ஆகாஷ் மூவரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.விபத்து குறிந்து தகவலறிந்த ஜீயபுரம் டி.எஸ்.பி., கண்ணன், வாத்தலை இன்ஸ்பெக்டர் தினேஸ்குமார், எஸ்.ஐ., ரத்தினவள்ளி மற்றும் போலீஸார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.விபத்தில் பலியான அங்குராஜ், பேபிகலா, குழந்தை அட்சயா உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
0 comments :
Post a Comment