சென்னை: தமிழகத்தின் புதிய தலைமை செயலக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். பிரதமர் வருகையையொட்டி வந்த இந்த மிரட்டல் காரணமாக போலீசார் கூடுதல் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர் போலீஸ துணை கமிஷனர் குறை தீர்க்கும் பிரிவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. இந்த செய்தியில் புதிய தலைமை செயலகத்தில் இன்னும் 24 மணி நேரத்தில் குண்டு வெடிக்கும் என குறுந்தகவல் வந்தது. இதனை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதும். போலீஸ் படையினர் புதிய தலைமை செயலகத்திற்கு வந்தனர்.
அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இருக்கிறதா என்றும் சோதனை நடத்தினர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால் சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என போலீசார் உறுதி செய்தனர்.
நாளை சென்னையில் நடக்கும் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவில் சென்னை வந்து சேர்கிறார். பிரதமர் வருகையை யொட்டி இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அடிக்கடி வரும் மிரட்டல்: போலீசுக்கு இதுபோன்று மிரட்டல் இ.மெயில்கள், போன்ற அழைப்புகள், தற்போது குறைந்த செலவில் எஸ்.எம்.எஸ்., என தொடர்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநகர பஸ்களில் குண்டுகள் வெடிக்கும், மீனாட்சி கோயிலுக்கு மிரட்டல், என இதுவரை வந்த மிரட்டலுக்கு இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. சைபர் கிரைம் போலீசார் தங்களுடைய கட்டமைப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தற்போது மக்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.
0 comments :
Post a Comment