சென்னை : சென்னையில் தேசிய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மன்மோகன் சிங் விழா மலரை வெளியிட்டு, 27 விஞ்ஞானிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பரிசு வழங்கிய பின்னர் பிரதமர் மாநாட்டு உரையை புத்தாண்டு வாழ்த்துடன் துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது : இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது; நோபல் பரிசு பெற்ற ராமானுஜம், சர்.சி.வி.ராமன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு அறிவியல் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாகும்; இந்திய பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment