background img

புதிய வரவு

குஜராத் கலவர வழக்கில் அன்னிய தலையீடு தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

குஜராத் கலவர வழக்கில் அன்னிய தலையீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி, ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான தூதரகத்தை, குஜராத்தை சேர்ந்த சமூக சேவகர் செட்வால்ட் என்பவர் தலைமையிலான 'நீதி மற்றும் அமைதிக்கான மையம்' அணுகியிருந்தது. 

மேலும் குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் தம்மையும் ஒரு மனுதாரராக செட்வால்ட் சேர்த்திருந்தார். 

இந்நிலையில் குஜராத் கலவர வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கலவர வழக்கில் சாட்சியமளிப்பவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஜெனீவா அமைப்பிடம் செட்வால்ட் முறையிட்டதற்கு நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான அமர்வு கடும் ஆட்சேபம் தெரிவித்தது; 

அத்துடன் குஜராத் கலவர வழக்குகளில் அன்னிய தலையீடை அனுமதிக்க முடியாது என்றும், அவர்களது வழிகாட்டுதல்படி நீதிமன்றத்தால் செயல்பட முடியாது என்றும் நீதிபதிகள் காட்டமாக கூறினர். 

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts