background img

புதிய வரவு

மத்திய அமைச்சர் பதவி: மல்லுக்கட்டும் திமுக!

அழுத்தும் பணிச்சுமை மற்றும் நொண்டியடிக்கத் தொடங்கிவிட்ட நிர்வாகம் போன்ற காரணங்களால் மத்திய அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவுசெய்துள்ள நிலையில், இத்தனை களேபரங்களுக்கு பின்னரும் இழந்துவிட்ட ஒரு மத்திய அமைச்சர் பதவியை பெற்றுவிட திமுக கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு புகார் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை பதவி விலக வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ்.




ஆனால் ராசாவை பதவி விலக வைக்க, திமுக தலைவர் கருணாநிதியை அத்தனை சுலபத்தில் இணங்க வைத்துவிடவில்லை காங்கிரஸ். 

மீண்டும் திமுகவை சேர்ந்த ஒருவருக்கு கேபினட் அந்தஸ்திலான மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் பேரிலேயே ராசாவை பதவி விலக வைத்தார் கருணாநிதி. 

ஆனால் ராசாவின் பதவி விலகல் கடிதத்தை வாங்கியதுமே, காங்கிரஸ் கட்சி அதிரடியாக கபில் சிபலிடம் ராசா வகித்த தொலைதொடர்பு இலாகாவை ஒப்படைத்தது. கூடவே இந்த இலாகா இனி திமுகவுக்கு தரப்படாது என்று கருணாநிதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

இந்நிலையில், ராசாவுக்கு பதிலாக திமுகவில் வேறொருவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக முன்வைத்தபோது, பார்க்கலாம் என தட்டிக்கழித்துவிட்டது காங்கிரஸ்.இந்நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அடுத்தடுத்து நடந்த சிபிஐ சோதனைகள் மற்றும் நெருக்கடிகளால் காங்கிரஸ் கட்சியுடனான உறவில் முறுகல் நிலை ஏற்பட, அமைச்சர் பதவிக்கான கோரிக்கையை வலியுறுத்துவதை திமுக நிறுத்திவைத்திருந்தது. 

இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, 'புரோட்டோகால்' விதிப்படி விமான நிலையத்திற்கு வரவேற்க செல்ல வேண்டிய முதல்வர் கருணாநிதி, அங்கு செல்லாமல் வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு காங்கிரஸ் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தினார். 
அத்துடன் ஆளுனர் மாளிகையில் பிரதமரை அவர் இரவில் சந்திப்பதாக இருந்த நிகழ்ச்சியையும் கருணாநிதி புறக்கணித்த நிலையில்தான், நிலைமையின் தீவிரத்தை காங்கிரஸ் உணர்ந்தது. 

இதனிடையே துணை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு கருணாநிதியை வற்புறுத்திய பின்னரே, மறுநாள் காலையில் ஆளுனர் மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த கருணாநிதி கோபத்தில் குமுறி தீர்த்ததாகவும், நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை தெளிவாக கூறிவிடுங்கள் என்றும் கேட்டதாக அப்போது செய்திகள் வெளியாகி இருந்தன. 

அதனைத் தொடர்ந்துதான் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று பிரதமரே பின்னர் செய்தியாளர்களிடம் கூறிவிட்டு சென்றார்.அதனை பின்னர் காங்கிரஸ் கட்சியும் உறுதுபடுத்தியது. 

இந்நிலையில் காங்கிரஸின் இந்த அறிவிப்பால் சற்று தெம்பான கருணாநிதி, பிரதமரை தாம் சந்தித்த மறுதினமே, டி. ஆர். பாலு மற்றும் தயாநிதி மாறான் ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி சோனியா காந்தியை சந்திக்கச் சொன்னார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts