background img

புதிய வரவு

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் இன்னும் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருக்கிறது எந்திரன். முதல் வாரத்தில் காணாமல் போன தென்மேற்குப் பருவக்காற்று இரண்டாவது வாரத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

5. எந்திரன்
14 வாரங்கள் முடிவில் இப்படம் 17 கோடிகளை வசூலித்து சாதனை பு‌ரிந்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 1.56 லட்சங்கள்.

4. சுட்டி சாத்தான்
இந்த மாயாஜாலப் படம் இதுவரை 29 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 3.85 லட்சங்கள்.

3. தென்மேற்குப் பருவக்காற்று
சீனுராமசாமியின் இந்தப் படம் இரண்டு வாரங்களில் 15 லட்சங்களையும் சென்ற வார இறுதியில் 7.15 லட்சங்களையும் வசூலித்துள்ளது.

2. ஈசன் 
சசிகுமா‌ரின் படத்தை இன்னமும் ரசிகர்கள் பார்க்கதான் செய்கிறார்கள். இதன் சென்ற வார இறுதி வசூல் 13.9 லட்சங்கள். இதுவரையான மொத்த சென்னை வசூல் 1.6 கோடி.

1. மன்மதன் அம்பு
தொடர்ந்து முதலிடத்தில் மன்மதன் அம்பு. சென்ற வார இறுதியில் மட்டும் இப்படம் 66.6 லட்சங்களை வசூலித்துள்ளது. இரண்டு வார முடிவில் இதன் சென்னை வசூல், 3.9 கோடிகள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts