background img

புதிய வரவு

குழந்தை தொழிலாளர் விவகாரம்: மே.வங்க முதல்வருக்கு கண்டனம்


கொல்கத்தா: பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி மற்றும் குழந்தை தொழிலாளர் முறை குறித்து உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா பேட்டி அளித்தார். அப்போது குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது கடினம் என்றார். ‘வேலைக்கு போகாதே என குழந்தை தொழிலாளர்களை நாம் தடுக்க முடியாது. இதனால் அவர்களது குடும்பத்தின் வருமானம் பாதிக்கப்படும்’ என்றார். இத்தகைய குழந்தைகளுக்கு வேலை செய்யும்போதே படிக்கவும் வசதி செய்து கொடுப்பது பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார். முதல்வரின் கருத்துக்கு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பாளர்கள் மட்டும்மல்லாது எதிர்க்கட்சி தலைவர் பார்த்தா சட்டர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குழந்தை பருவம் என்பது படிப்பதற்கும் விளையாடுவதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் உள்ள பருவம். குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் இவ்வாறு பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என பார்த்தா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts