background img

புதிய வரவு

7 இலட்சம் மருத்துவர்கள் தேவை: இந்திய மருத்துவ பேரவை


இந்தியர்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை அளிக்க மேலும் 7 இலட்சம் மருத்துவர்கள் தேவை என்று இந்திய மருத்துவ பேரவை (Medical council of India - MCI) கூறியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் 66வது மருத்துவர் மாநாட்டில் பேசிய இந்திய மருத்துவ பேரவையின் தலைவர் எஸ்.கே.சரின், 2015ஆம் ஆண்டுவரைலான பார்வை என்ற தங்களின் முன்னோக்குத் திட்டப் பரிந்துரையில் இதைக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“நமது நாட்டிற்கு 7 இலட்சம் மருத்துவர்கள் தேவை என்று மதிப்பீடு செய்துள்ளோம். இன்றுள்ள அளவிற்கு 35,000 மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்குகின்றோம். இதனை 50 ஆயிரமாக உயர்த்தினாலும் கூட, அந்த இலக்கை எட்ட 2031ஆம் ஆண்டு வரை ஆகும். ஆனால் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது”என்று கூறியுள்ளார்.

மருத்துவ உயர் படிப்பிற்கான இடங்களை 9 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். இது ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். எந்த அளவிற்கு மருத்துவ பட்டதாரிகள் வருகிறார்களோ அவர்களுக்கு இணையாக மருத்துவ உயர் பட்டம் பெற்றவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்” என்றும் சரின் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts