இன்றைய அளவில் கூட கர்ப்பிணியின் மரணத்திற்கும், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் மரணத்திற்கும் முக்கியக் காரணமாக விளங்கும் நோய்களுள் மிகை இரத்த அழுத்தம் முதன்மை வகிக்கிறது எனலாம்.
சாதாரணமாக, ரத்த அழுத்தத்தில் சுருங்கு ரத்த அழுத்தம் 120 மி.மீ. ஆகவும், விரிவு ரத்த அழுத்தம் 80 மி.மீ. ஆகவும்தான் இருக்கும். முதல் ஆறு மாத கர்ப்பக் காலத்தில் ரத்த அழுத்தம் சற்று குறைந்து காணப்படும். சுருங்கு ரத்த அழுத்தம் 100 ஆகவும், விரிவு ரத்த அழுத்தம் 70 ஆகவும் இருக்கக்கூடும்.
கடைசி மூன்று மாத காலத்தில்தான் ரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். 24வது வாரத்திற்குப் பிறகுதான் ரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கிறது. விரிவு ரத்த அழுத்தம் 130 மி.மீட்டரைத் தாண்டினால் அதை இதயத்தால் தாங்க முடியாது. மூளையில் ரத்தக் கசிவு போன்றவை ஏற்படும்.
கர்ப்பக் காலத்தில் விரிவு அழுத்தம் 110 அல்லது 120 ஆக இருக்கும்போதே இதயப் பிரச்சனை மற்றும் மூளை ரத்தக் கசிவு ஏற்பட்டுவிடுகிறது. கர்ப்பச் சன்னி என்ற பிரச்சனை, விரிவு அழுத்தம் 90 மி.மீ. அல்லது 100 மி.மீ. இருக்கும் போது வந்துவிடுகிறது.
இந்த ரத்த அழுத்தம் ஏன் வருகிறது என்றால், பாரம்பரியம், வறுமையான சூழ்நிலை, சிறுநீரகப் பிரச்சனைகள், பனிநீர் மிகைப்பு, இரட்டைக் கோளாறுகள், எப்போதும் டென்ஷன், கவலை போன்ற காரணங்களால்தான்.
கருத்தரிக்கும் முன்போ அல்லது கர்ப்பக் காலத்திலோ ரத்த அழுத்தம் இருந்திருந்தால் அது தாயையும், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையையும் கண்டிப்பாகப் பாதிக்கும். கர்ப்பச் சன்னி, கர்ப்பிணி மரணமடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். திடீரென தலைச்சுற்றல், பார்வை மங்கலாகி பின் இருண்டது போன்றிருத்ல் ஆகியவை நேரிடும்.
இதைத் தவிர்க்க, கர்ப்பிணிக்குப் பூரண ஓய்வு, தூக்க மருந்துகள், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்து தாய்-சேய் இருவரையும் காப்பாற்றுவார்கள்.
ரத்த அழுத்தப் பரிசோதனையை ஆரம்பத்திலேயே தவறாமல் மேற்கொள்ள வேண்டும். பிரசவ காலத்திற்குப் பின்னரும் ரத்த அழுத்தப் பரிசோதனையை மேற்கொண்டால்தான் நோய் தொடருகிறதா என்பதைக் கண்டறிய இயலும்

0 comments :
Post a Comment