background img

புதிய வரவு

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!

நம்பினால் நம்புங்கள் அல்லது நம்பாமல் இருங்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கான முக்கிய சூட்சுமம், குறைவான அளவு உணவு சாப்பிடுவதில்தான் உள்ளதாக புதிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.


மனிதர்களுக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ, மிருகங்களிடம் இந்த ஆய்வை நடத்திபார்த்ததில் அவை நூற்றுக்கு இருநூறு விழுக்காடு சரியென நிரூபணமாகி உள்ளதாக அடித்துக் கூறுகின்றனர் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள்.


இது தொடர்பாக அவர்கள் நடத்திய மருத்துவ ஆய்வில், கடுமையான உணவு கட்டுப்பாடு, அதாவது தேவைக்கு ஏற்ப, கொஞ்சமாக மட்டும் சாப்பிடுவது, முதுமை அடைவதை தள்ளிப்போடுவதாக தெரியவந்துள்ளது.


குறைவாக சாப்பிடுவதன் மூலம், உடலின் உயிரணுக்கள் எப்போதும் சக்தியை எதிர்பார்த்து இருக்கும் என்பதால், அவை அதன் ஆயுட்கால சுழற்சி முடிவை நோக்கி வேகமாக நகராது. இதனால் உடலின் ஆயுள் நீடிக்கும் என்று ஆய்வில் தெரியவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும் விலங்குகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டபோது, அவைகளிடம் ஆரோக்கியமான பகுப்பு மரபணுக்கள் ஏராளமாக இருப்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
12»

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts