background img

புதிய வரவு

பாமாயில் ஊழல் வழக்கு: CVC தாமஸூக்கு எதிராக விசாரணையை தொடர அனுமதி

பாமாயில் ஊழல் வழக்கில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் தாமஸுக்கு எதிராக விசாரணையை தொடர கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

கேரளாவில் கருணாகரன் முதலமைச்சராக இருந்தபோது, சர்வதேச சந்தை விலையைவிட அதிகவிலை கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றம்சாற்றப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை கேரள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் 2007 ஆகஸ்டு மாதம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. 

இந்நிலையில் தாமஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 

இத்னைத் தொடர்ந்தே மேற்கூறிய அனுமதியை உச்ச நீதிமன்றம் இன்று அளித்தது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts