background img

புதிய வரவு

இதுவரை எவ்வளவு மணல் அள்ளப்பட்டது: பதிலளிக்க த‌மிழக அரசு‌க்கு உத்தரவு


கடந்த ஆண்டுகளில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது எ‌ன்று‌ம் பக்கத்து மாநிலங்களில் மணல் குவாரிகளின் செயல்பாடு பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவது தொட‌ர்பான வழக்கில், 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள உய‌ர் ‌நீ‌திம‌ன்ற மதுருை ‌கிளை கட‌ந்த ஆ‌ண்டு டிச‌ம்ப‌‌ர் 2ஆ‌ம் தே‌தி உத்தரவிட்டது.

இந்த உத்தரவு குறித்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழக தொழில்துறை செயலாளர், கனிமம் மற்றும் தாதுப் பொருட்கள் துறை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட ஆ‌ட்‌‌சிய‌ர், தூத்துக்குடியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் படுகைக்கான செயல் பொறியாளர் ஆகியோர் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

''ஆட்களை வைத்து அள்ளுவதற்கும் கூலியாள் பற்றாக்குறை உள்ளது. ஆட்களை வைத்து விரைவாக மணல் அள்ளவும் முடியாது. எனவே அந்த உத்தரவை சற்று திருத்தி அமைக்க வேண்டும்'' எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌‌றி‌யிரு‌ந்தன‌ர்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.நாகமுத்து ஆகியோர் கொ‌ண்ட அம‌ர்வு, ஒவ்வொரு மணல் குவாரியிலும் அதிகபட்சம் இரண்டு பொக்லைன் எந்திரங்களை மட்டுமே பயன்படுத்தலாம். எத்தனை பொக்லைன் எந்திரங்கள் தேவை என்பதை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

காலை 6 மணிக்கு முன்பதாகவும், மாலை 7 மணிக்கு பிறகும் பொக்லைன் எந்திரங்களை உபயோகிக்கக் கூடாது என்று கடந்த 10ஆ‌ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பி‌த்தது.

இ‌ந்த மனு நே‌ற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பி‌ல் அடவகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். இதை‌த் தொட‌ர்‌ந்து ‌‌நீ‌திபதிகள் ‌பிற‌ப்‌பி‌த்த உ‌த்தர‌வி‌ல், கடந்த ஆண்டுகளில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது? எத்தனை எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது? அண்டை மாநிலங்களில் மணல் குவாரிகளின் செயல்பாட்டின் விவரம் என்ன? எ‌ன்பது பற்றி வரு‌ம் 1ஆ‌ம் தேதி பதிலளிக்கும்படி த‌மிழக அரசு‌க்கு உத்தரவிட்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts