2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்பதில் இடதுசாரிகள் உறுதியாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடக்கவில்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை எதிர்கொள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அச்சப்படுவது ஏன் என்று கேள்வி விடுத்தார்.
ஊழல்வாதிகளை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாற்றிய பரதன், போபர்ஸ் ஊழல் அக்கட்சியை இன்னமும் துரத்திக்கொண்டிருப்பதாக மேலும் கூறினார்.

0 comments :
Post a Comment