background img

புதிய வரவு

மும்பை கடல் மீண்டும் மாசடைந்தது


எண்ணெய் குழாய் வெடித்து எண்ணெய் கடலில் கொட்டியதால், மும்பை கடல் மீண்டும் மாசடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மும்பை கடலில் வந்துகொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த டேங்கர்களில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டியதால், கடல் பெருமளவில் சேதமடைந்தது.

பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னரே, நீண்ட நாட்கள் கழித்து மும்பை கடலில் எண்ணெய் மாசு நீங்கியது.

இந்நிலையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) சார்பில், மும்பை கடலோரத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய் குழாய், இன்று காலை 8/45 மணியளவில் வெடித்தது.

இதனால் குழாய் வழியாக சென்று கொண்டிருந்த எண்ணெ கடலில் கொட்டி, கடல் மீண்டும் மாசடைந்துள்ளது..

இருப்பினும் மதியத்திற்குள் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்டு, எண்ணெய் கொட்டுவது நிறுத்தப்பட்டதாக ஓஎன்ஜிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts