வடமாநிலங்களில் வெங்காயம் விலை மீண்டும் உயர்வு
லக்னோ: வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெங்காயம் விலை அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 வரை சென்றது. அதன் பிறகு வெங்காயத்தின் விலை குறைந்தது. கடந்த வாரம் மொத்த மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ. 30-லிருந்து ரூ. 35 வரை குறைந்தது. தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் மொத்த விலை 1 கிலோ ரூ.50 க்கு விற்கப்படுகிறது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக லக்னோ வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இதே போல அங்கு தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது. தக்காளி மொத்த விலை ஒரு கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்கப்படுகிறது.
0 comments :
Post a Comment