background img

புதிய வரவு

பருத்திவீரனுக்கு பிறகு தமிழில் நல்ல வேடங்கள் கிடைக்கவில்லை: பிரியாமணி வருத்தம்

திருவனந்தபுரம் அருகே உள்ள ஏருகுட்டாவில் கலை பண்பாட்டு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியாமணி கலந்து கொண்டார்.
அங்கு பள்ளி குழந்தை களுடன் இணைந்து நடனமாடினார்.


அதன்பின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அவர் கூறியதாவது:-


பருத்தி வீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரம்தான் எனக்கு தேசியவிருது பெற்று தந்தது. அதற்காக அதுபோன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.


முத்தழகு போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை விட விதவிதமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அவ்வாறு மாறுபட்ட வேடங்கள் எனக்கு கிடைப்பதில்லை.


கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் வெவ்வேறு விதங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டால் வெற்றி பெறுகிறது.


தமிழ் சினிமாவில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். எனக்கு அளிக்கப்படும் கதாபாத்திரங்களின் தன்மை மாறுபட வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியாக நடிப்பதை நான் விரும்பவில்லை.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts