எத்தனையோ சாதங்களைப் பார்த்துவிட்டோம். இப்பொழுது வித்தியாசமான, சுவையான ஆரஞ்சு சாதத்தைப் பார்ப்போம்.
தேவையானவை:
பச்சரிசி - 1 கப்
ஆரஞ்சு சுளை - 10
ஆரஞ்சு பழச்சாறு - 1 கப் (கொஞ்சம் புளிப்பாக)
பச்சை மிளகாய் - 6
கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவையான அளவு
கேசரிப் பவுடர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அரிசியை சுத்தப்படுத்தி சற்று உதிரிப் பதத்தில் வடித்துக் கொள்ளவும்.
ஆரஞ்சு சாற்றில் உப்பு, கேசரிப் பவுடர் கலந்து கொள்ளவும்.
சுத்தப்படுத்திய ஆரஞ்சு சுளைகளை சிறிய துண்டுகளாக உதிர்க்கவும்.
எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வடித்த சாதத்தில் மேல் கொட்டவும்.
அதில் ஆரஞ்சு சுளைகள், ஆரஞ்சு பழச்சாறுக் கலவையை கொட்டிக் கிளறவும்.
அவ்வளவுதான், கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.
0 comments :
Post a Comment