டி.யு.சி.எஸ். என்று அழைக் கப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் காம தேனு சிறப்பங்காடி நடத் தப்படுகிறது.
வெளி மார்க் கெட்டை விட மளிகை பொருட் கள் குறைந்த விலை யில் இங்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி செல்கின் றனர். தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை உள்ளிட்ட பல விசேஷ காலங்களில் மலிவு விலையில் பொருட்கள் விற்பனை செய் யப்படுகிறது.
வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்திற்கு பறந்த போதிலும் பொதுமக்களுக்கு கிலோ ரூ.30, ரூ.40 என்ற விலையில் வழங்கினார்கள். வெளி மாநிலத்தில் இருந்து வெங்காயத்தை நேரிடை யாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு தொடர்ந்து விற்பனை செய் யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை யொட்டி ரூ.100 விலையில் “பொங்கல் பை” விற்பனை திட்டத்தை தற்போது தொடங்கி உள்ளனர். பொங்கல் வைக்க தேவைப்படும் ரூ.150 மதிப் பிலான பொருட்கள் ரூ.100 விற்கப்படுகிறது. பொன்னி பச்சரிசி 1 /2 கிலோ, உருண்டை வெல்லம் 1/2 கிலோ, முந்திரி பருப்பு 50 கிராம், திராட்சை 50 கிராம், நெய் 50 கிராம், பாசிப்பயிறு 100 கிராம் மற்றும் ஏலக்காய் ஆகிய பொருட்கள் ஒரு பையில் அடைத்து வழங்கப் படுகிறது.
இதுபற்றி டி.யு.சி.எஸ். நிறுவனத்தின் தனி அலுவலர் ஆர்.ஜி.சக்தி சரவணன் கூறியதாவது:- ஏழை - எளிய, நடுத்த மக்கள் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்கள் அடங்கிய பையை லாப நோக்கம் கருதாமல் குறைந்த விலையில் வழங்குகிறோம்.
பொங்கல் வைப்பதற்கு தேவைப்படும் 7 பொருட்கள் போதுமான அளவிற்கு உள்ளன. சென்னை நகரில் உள்ள அனைத்து டி.யு.சி.எஸ். காமதேனு சிறப்பங்காடிகளில் பொங்கல் பை விற்பனைக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments :
Post a Comment