சென்னை: திருப்பூர் மாநகராட்சியின் நிர்வாகசீர்கேட்டைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.கசார்பில் திருப்பூரில் வரும் 13ஆம் தேதிகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனஅக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில், திருப்பூர் நகராட்சிமாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்றஅறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குமேலாகியும், பெயர் மாற்றம்செய்யப்பட்டதைத் தவிர, மண்டலங்கள்பிரிக்கப்படுதல், பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுதல், உரிய நிதி ஆதாரங்களைஏற்படுத்தித் தருதல் போன்ற எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.
மாநகராட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக தற்போது ஆறுநாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்செய்யப்படுவதாகவும், மேட்டுப்பாளையம் தண்ணீர் முழுமையாக வழங்கப்படும்என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும், இதே போன்றுஅங்கீகரிக்கப்படாத 15 வார்டுகளில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்றும், குப்பைகள்அகற்றப்படாமல் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பல்வேறு தொற்று நோய்கள்பரவும் அபாயம் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குடிசை மேம்பாட்டு திட்டப் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளதாகவும், திருப்பூர் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும்,குழியுமாக காட்சி அளிப்பதாகவும், ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்கமுடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறிக் கொண்டு இருப்பதாகவும், இதன்காரணமாக சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றைஉடனடியாக செலுத்துமாறு பொதுமக்களை மாநகராட்சி ஊழியர்கள்மிரட்டுவதாகவும் புகார்கள் வருகின்றன.
திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் நிலைமைகளைப் பார்த்தால், நிர்வாகம்என்ற ஒன்று இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. எனவே,திருப்பூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டிற்குக் காரணமான மாநகராட்சிநிர்வாகம் மற்றும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களுடையஅத்தியாவசியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 13ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சிஅலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதாஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment