background img

புதிய வரவு

ஸ்பெக்ட்ரம்: நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் எந்தப் பயனும் இல்லை


புதுதில்லி, ஜன. 2: 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை.

இது குறித்து இணையதளத்தில் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதாவது:

விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல. பத்துக்கும் மேற்பட்ட அளவில் விவாதம் நடத்தியாகிவிட்டது. ஆனால் இதுவரை எந்தப் பலனும் கிட்டவில்லை. விலை குறைந்தபாடில்லை. விலையைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டதால் என்ன விளைந்தது என்பதை அரசு விளக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கபட்டதோடு, நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வெட்டுத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த வெட்டுத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இத்தனை நடந்தும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த விஷயத்தல் அரசு கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டது.

இப்போது 2-ஜி அலைக்கற்றை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியான பாஜக முன்வரவில்லை என்று ஆளும் தரப்பில் குறை கூறி வருகினறனர். விலை உயர்வு குறித்த விவாதத்தால் எந்தப் பயனும் கிட்டவில்லையோ அதேபோலத்தான் 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து விவாதிப்பதாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதனால் விவாதிப்பதை எல்லாம் நிறுத்திவிட்டு செயலில் இறங்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்காவிட்டால் குளிர்கால கூட்டத் தொடரைப் போல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சியினர் மிரட்டி வருகின்றனர். பிப்ரவரி 3-வது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து பொது கணக்குக் குழுவால் முழுமையாக விசாரிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்பதற்கு இல்லை என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts