background img

புதிய வரவு

உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை: ரசிகர்கள்-போலீஸார் மோதல்


டாக்கா, ஜன.2: வங்கதேச தலைநகர் டாக்காவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்கச் சென்ற ரசிகர்களுக்கும், போலீஸôருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ரசிகர்கள், பத்திரிகையாளர் ஒருவர் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் டாக்காவில் நடைபெறுகிறது. இதில் இந்திய-வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் ஞாயிற்றுக்கிழமை முதல் வங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கடும் பனியையும் பொருட்படுத்தாமல் டிக்கெட் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டாக்காவில் உள்ள வங்கி ஒன்றின் முன்பு சனிக்கிழமை இரவில் இருந்தே குவியத் தொடங்கினர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வங்கிக்கு வந்த அதிகாரிகள், அந்த கிளையில் 500 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் உரிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைப்பதற்காக போலீஸôர் தடியடி நடத்தியபோது அது மோதலாக உருவெடுத்தது. இதையடுத்து மேலும் கோபமடைந்த ரசிகர்கள் அங்கிருந்த கார்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான வங்கதேசம் மோதும் ஆட்டம் உள்ளிட்ட 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

"ஆட்டம் ஒன்றுக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகளை மட்டுமே வங்கதேசத்தில் உள்ள 80 வங்கிக் கிளைகள் மூலம் விற்பனை செய்ய வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் நாட்டில் உள்ள 150 மில்லியன் மக்களும் போட்டியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றனர்' என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநரும், உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை கமிட்டி தலைவருமான தமிம் தெரிவித்துள்ளார்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts