background img

புதிய வரவு

ஊழல் குற்றச்சாற்று மீது எட்டியூரப்பா, அசோகா மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி


அரசு நிலத்தை குறைந்த விலைக்கு தனது மகன்களின் நிறுவனங்களுக்கு விற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா, உள்துறை அமைச்சர் அசோகா ஆகியோர் மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது என்று கர்நாடக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை நிராகரித்த ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 31 டி, 31 இ ஆகிய பிரிவுகள் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 405இன் கீழும் முதல்வர் பி.எஸ்.எட்டியூரப்பா, உள்துறை அமைச்சர் ஆர்.அசோகா ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்துள்ளதாக கர்நாடக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

“உங்களுக்கு (எட்டியூரப்பா) எதிரான கடுமையான ஊழல் குற்றசசாற்றுகளை மூடிவிட வேண்டும் என்று உங்களது அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் கூறுகிறது. இது திருடன் காவலரை கண்டிப்பது போன்று உள்ளது” என்று ஆளுநர் பரத்வாஜ் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.

முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி அளித்த ஆளுநரைக் கண்டித்து 25ஆம் தேதி, செவ்வாயக் கிழமை ஆளுநர் மாளிகை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்தப்போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts