ஊட்டி: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆர ராசாவை மட்டும் கைது செய்தது உள்நோக்கம் கொண்டது, என்றார் இயக்குநர் சீமான்.
நாம்தமிழர் அமைப்பின் மாநில தலைவர் சீமான் ஊட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் வரவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்வேன்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் அரசிந் செயல்பாடு சந்தேகம் தருவதாக உள்ளது. ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட ஊழல்களின் சிக்கியவர்களை ஒன்றும் செய்யாமல், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசாவை மட்டும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றார்.
முன்னதாக கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பிய இடத்தில் சுவரொட்டிகளை வைத்து கொள்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் சுவரொட்டிகள் வைக்க அரசு அனுமதிப்பது இல்லை.
இறையாண்மைக்கு எதிராக பேசுவேன் என்று யூகித்து கொண்டு அனுமதி மறுப்பது தவறானது. என்னுடைய பேச்சை கேட்கலாமா? வேண்டாமா? என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும் அதிகாரிகள் முடிவு செய்ய கூடாது. கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும். தேசிய கட்சிகளின் ஆட்சி தேவையில்லை. எனவே சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம். இதற்காக மற்றவர்களை ஆதரிக்கவும் மாட்டோம். போட்டியிடவும் மாட்டோம். மக்கள் இயக்கமாகவே செயல்படுவோம் என்றார்.

0 comments :
Post a Comment