பெங்களூர்: வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவை விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரால் நேரில் ஆஜராக முடியாது என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனா கூறுகையில், தேவைப்படும்போது ஜெயலலிதா விசாரணைக்கு நேரில் அழைக்கப்படுவார் என்றார்.
இதையடுத்து ஒரு சாட்சியின் வாக்குமூலத்தை மொழி பெயர்த்ததில் ஒரு பாராவில் தவறு இருப்பதாகவும், அதை சரி செய்ய 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இந்தத் தவறை ஓரிரு நாளில் சரி செய்துவிட முடியும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி ஆகியோர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடித்து வருவதாக திமுக புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெ.வுக்கு உடல்நிலை சரியில்லை என சட்டசபையில் தீர்மானம்:
முன்னதாக நேற்று சட்டசபையில் அதிமுக சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் சட்டமன்ற விதி 20(1)ன் படி இந்த கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி கோரப்பட்டது.
இதை ஏற்ற சபாநாயகர் தீர்மானத்தை கொண்டு வர சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளித்தார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே இந்த கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ள இயலாததற்கு காரணமாக இந்த தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்று நான் முன் மொழிகிறேன் என்றார்.
அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் இதை வழி மொழிந்தார். இதையடுத்து இந்த கூட்டத் தொடருக்கு ஜெயலலிதா வராமல் இருப்பதற்கான அனுமதி வழங்கும் தீர்மானம் ஏகமதான குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந் நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஜெயலலிதாவை நேரில் ஆஜராகுமாறு கோரக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment