மொகாலி: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் தென் ஆப்ரிக்கா எளிதாக வெற்றி பெற காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில், இன்று நடக்கும் "பி பிரிவு லீக் போட்டியில் (பகல்) தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
"டாப்-ஆர்டர் பலம்:
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் துவக்கிய உற்சாகத்தில் தென் ஆப்ரிக்க அணி இன்று களமிறங்குகிறது. தென் ஆப்ரிக்க அணியின் மிகப் பெரிய பலம் "டாப்-ஆர்டர். துவக்க வீரர்களாக களமிறங்கும் கேப்டன் ஸ்மித், ஆம்லா ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 4 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றிய நட்சத்திர வீரர் காலிஸ், இன்று எழுச்சி காணும் பட்சத்தில், நெதர்லாந்துக்கு சிக்கலாகிவிடும். கடந்த போட்டியில் சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்ட டிவிலியர்ஸ் இன்றும் சாதிக்க வாய்ப்பு உள்ளது. இவர்களை தவிர டுமினி, டு பிளசிஸ் உள்ளிட்டோரும் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது.
ஸ்டைன் அபாரம்:
தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்துவீச்சு "சூப்பர் பார்மில் உள்ளது. ஸ்டைன், மார்னே மார்க்கல் உள்ளிட்ட வேகங்கள், தங்களது ஐ.பி.எல்., அனுபவத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், எதிரணிக்கு திண்டாட்டமாகிவிடும். சுழலில் அனுபவ போத்தா அசத்தி வருகிறார். இவருடன் இளம் இம்ரான் தாகிர் இணைவது சிறப்பம்சம். தனது முதல் சர்வதேச போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய தாகிர், இம்முறை அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. "மிடில்-ஓவரில் காலிஸ் கைகொடுக்கும் பட்சத்தில், நெதர்லாந்து அணியை சொற்ப ரன்களில் சுருட்டிவிடலாம்.
டசாட்டே எதிர்பார்ப்பு:
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தோல்வி கண்ட நெதர்லாந்து அணி, கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட நெதர்லாந்து வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் திணறினர். இங்கிலாந்துக்கு எதிராக சதம் கடந்த டசாட்டே மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவருக்கு, டாம் கூப்பர், கெர்வெஜீ, பார்ரெசி, கேப்டன் பீட்டர் போரன் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது.
பவுலிங் பலவீனம்:
நெதர்லாந்து அணியின் பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது. இதனால்தான் இங்கிலாந்துக்கு எதிராக நல்ல ஸ்கோரை பெற்றிருந்தபோதும், தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய புக்காரி, சீலார் உள்ளிட்டோர் இன்று கைகொடுக்கும் பட்சத்தில், தென் ஆப்ரிக்காவின் ரன் வேட்டையை தடுக்கலாம்.
---
மூன்றாவது முறை
சர்வதேச ஒருநாள் மற்றும் உலக கோப்பை அரங்கில், தென் ஆப்ரிக்கா-நெதர்லாந்து அணிகள் மூன்றாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய இரண்டு போட்டியிலும் (1996, 2007) தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.
* இப்போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணி (328/3, 353/3), 300 ரன்களுக்கு மேல் குவித்தது. நெதர்லாந்து அணியால் (168/8, 132/9), 200 ரன்கள் கூட எடுக்கமுடியவில்லை.
* நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் ஹட்சன் (161), காலிஸ் (128*) சதம் கடந்தனர். நெதர்லாந்து சார்பில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டசாட்டே மட்டும் 57 ரன்கள் எடுத்தார்.

0 comments :
Post a Comment