சென்னை : நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, 40 இடங்களில் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இக்கட்சியின் தலைவர் கார்த்திக் சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: எங்கள், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிடுவது என, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அ.தி.மு.க.,பிரதிநிதிகள் ஜனவரி மாதம் என்னை சந்தித்து அவர்கள் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசினார்கள். அதற்கான தொகுதிகள் குறித்தும் பேசப்பட்டது. அதன் பிறகு நேற்று வரை எங்களை அழைத்து பேசவில்லை. எனக்கும், அ.தி.மு.க., பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை குறித்து ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டதா என்று, எனக்கு தெரியவில்லை. அவர்கள் இதுநாள் வரை தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு அழைக்காதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. எங்களை காக்க வைத்து, ஏமாற்றி விட்டனர். அ.தி.மு.க.,விடமிருந்து முறையான அழைப்பு வராததால், கூட்டணியிலிருந்து எங்கள் கட்சி விலகிவிட்டது. இதற்கான கடிதம் சென்னையில் போயஸ்கார்டனுக்கு சென்று கொடுக்கப்பட்டு விட்டது.
எங்கள் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.நான் சிவகாசி, அம்பாசமுத்திரம், கோவில்பட்டி, சங்கரன் கோவில் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன்.
எங்கள் கட்சி வேட்பாளர்கள் நேர்காணல் நாளை மறுநாள் சென்னையில் துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. பெண் வேட்பாளர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் பிரசாரத்தை அம்பாசமுத்திரத்திலிருந்து துவங்க உள்ளேன். எனது கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன்.
அ.தி.மு.க.,வில் நாங்கள் இல்லை. இருப்பதாக சொன்னாலும் நாங்கள் ஏற்கமாட்டோம். தி.மு.க.,வுடன் கூட்டணி கண்டிப்பாக இல்லை. ம.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்கிறீர்கள். வைகோ எனது நண்பர். அவர் அழைத்தால், எங்கள் கொள்கைக்கு ஒத்து வந்தால் கூட்டணி குறித்து பேசப்படும்.மொத்தத்தில் கூட்டணி என்றால் எனக்கு, "அலர்ஜியாக' இருக்கிறது. இவ்வாறு கார்த்திக் கூறினார்.
10 "சீட்' கேட்க நான் என்ன பைத்தியமா? : சீட் விவகாரம் பற்றி கார்த்திக் கூறியதாவது: அ.தி.மு.க.,விடம் நான் 10 சீட் கேட்டதாக வந்த செய்திகள் தவறானது. 10 "சீட்' கேட்க நான் என்ன பைத்தியமா? நான் கேட்டது மூன்று "சீட்' தான். அது, இரண்டானது,பிறகு ஒன்றானது. அதன் பிறகு பதிலேதும் இல்லாமல் தேய்ந்து போனது. எனக்கு எந்தெந்த தொகுதியில் எவ்வளவு பேர் ஆதரவாக உள்ளனர் என்பது அவர்களுக்கு தெரியாமலில்லை. ஜெயலலிதா சார்பில் என்னிடம் பேச்சு வார்த்தை நடத்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இருவரை அனுப்பியிருந்தார். ஒரு முறை மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தேன். அதன் பிறகு இருவர் மட்டுமே என்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்தனர். அவர்கள் நடத்திய பேச்சு வார்த்தை சிரிப்பாகத் தான் இருந்தது. அவர்கள் இருவருக்கும் "இம்சைஅரசர்கள்' என்று நான் செல்லப் பெயர் வைக்கும் அளவிற்கு அவர்களின் பேச்சு வார்த்தை இருந்தது. இதனால், நான் அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து, கட்சி தலைமைக்கு போய் சேர்ந்திருக்குமா என்று கூட தெரியவில்லை. இவ்வாறு கார்த்திக் கூறினார்.

0 comments :
Post a Comment