background img

புதிய வரவு

கேப்டன் என்றால் டோணி மட்டுமே-விஜயகாந்த் இனி பேசப்படாது-வடிவேலு

விஜயகாந்த் இன்றோடு தன்னைக் கேப்டன் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். டோணி மட்டுமே கேப்டன் என்று கூறியுள்ளார் காமெடியன் வடிவேலு.

மதுரை திருமங்கலத்தில் நடிகர் வடிவேலு, திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டிப் பேசினார். வழக்கம் போல விஜயகாந்த்தை வாரி எடுத்தார்.

அவர் பேசுகையில் கேப்டன் யார், டோணியா அல்லது விஜயகாந்த்தா. இனிமேல் தன்னை யாரும் கேப்டன் என்று அழைக்கக் கூடாது என விஜயகாந்த் சொல்ல வேண்டும். அவரும் தன்னை கேப்டன் என்று அழைக்கக் கூடாது.

அவருக்குப் படம் இல்லை, ஷூட்டிங் இல்லை. இதனால்தான் கட்சி ஆரம்பித்துப் பேசி வருகிறார்.

திமுகவுக்கு மட்டுமே வாக்களியுங்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான், நலத் திட்டங்கள் தொடரும், உங்களுக்கு நல்லது நடக்கும் என்றார் வடிவேலு.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts