நமீதா என்றாலே ரசிகர்களுக்கு நினைவு வருவது அவரது கவர்ச்சியும், உடல் அமைப்பும் தான். ஆனால் இனிமேல் நமீதாவை அப்படி பார்க்க முடியாது. உடல் எடையை குறைத்து விரைவில் புதுப்பொலிவுடன் வரப்போகிறார்.
தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்டவர் நடிகை நமீதா. உயரத்திற்கு ஏற்ற எடையும், கவர்ச்சியான உடம்பும் அவருக்கு அதிக ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது. தமிழில் நடித்த வந்த நமீதா இடையில் கன்னடப் படத்தில் நடிப்பதற்காக தனது எடையை வெகுவாக குறைத்தார். இதனிடையே தமிழில் இளைஞன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்காக தமது எடையை மறுபடியும் கூட்டினார். இளைஞன் படமும் முடிந்து திரைக்கு வந்துவிட்டது, இதனால் தமது எடையை மீண்டும் குறைக்க ஆரம்பித்துள்ளார். எடையை குறைக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே கணிசமான அளவிற்கு எடையை குறைத்துள்ளார். இப்படியேபோனால் இன்னும் சில நாட்களில் சிக்கென்று உடம்பை மாற்றிவிடுவார் போல் இருக்கிறது.
இதுகுறித்து நமீதா கூறுகையில், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்னை யாரும் நமீதா என்று நம்ப மாட்டீர்கள், அந்தளவிற்கு ரசிகர்கள் என்னை புதுபொலிவுடன் பார்க்க போகிறார்கள். இப்போதே என்னை பார்க்கும் பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இன்னும் முடிக்கவில்லை, அதற்குள்ளேயே இவ்வளவு ஆச்சரியம் என்றால், நான் முழுமையாக மெலிந்து அழகானால் எப்படியெல்லாம் ஆச்சரியப்படப் போகிறார்களோ என்று கூறிச் சிரிக்கிறார் நமீதா.
உடல் எடையை குறைக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனாவின் டயட்டிஷியன் ருஜுதா திவேகரின் ஆலோசனைப்படி டயட்டைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளாராம். கூடவே யோகாவையும் செய்து எடையை குறைத்து வருகிறாராம் நமீதா.

0 comments :
Post a Comment