background img

புதிய வரவு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் கருணாநிதி அறிவிப்பு


சென்னை, ஜன. 3: தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சி, டி பிரிவு அலுவலர்களுக்கு 30 நாட்கள் ஊதியம் போனஸôக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:

2009-2010-ம் ஆண்டுக்கு "சி', "டி' பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையாக ரூ. 3 ஆயிரம் உச்சவரம்புக்கு உட்பட்டு போனஸ் வழங்கப்படும்.

"ஏ', "பி' பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் சிறப்பு போனஸ் அளிக்கப்படும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசு வழங்கப்படும்.

முன்னாள் கிராம அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கும் பொங்கல் பரிசாக இந்த ஆண்டு முதல் ரூ. 500 அளிக்கப்படும்.

சிறப்பு மிகை ஊதியம்: ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர, பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிந்து வரும் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் உள்ள பஞ்சாயத்து உதவியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும், ஒருபகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சம்பள விகிதம், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.

இந்த போனஸôல் அரசுக்கு ரூ. 277 கோடி செலவாகும் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts